ரஞ்சன் ராமநாயக்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

ஊடக சந்திப்பு இறுவட்டுக்களை ஒப்படைக்குமாறு 3 ஊடக நிறுவனங்களுக்கும் உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில் விடுவிக்குமாறு மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பம் நுகேகொட நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

அத்துடன் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி ஆசா காவத்த, ஊடக சந்திப்பொன்று நடத்தியதாக கூறப்பட்ட கருத்துகள் தொடர்பில் வெளியாகிய காணொளிகள் அடங்கிய இறுவட்டுக்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு மூன்று தனியார் ஊடகங்களுக்கு நுகேகொட நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது அவர் கைதுசெய்யப்பட்டமை சட்ட ரீதியான நடைமுறை பேணப்படவில்லையென்றும் அதன் காரணமாக அவரை பிணையில் விடுவிக்குமாறும் அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குழு விடுத்த கோரிக்கையை நீதிவான் ஹர்ஷ பெல்பொல நிராகரித்தார்.

எந்தவிதமான குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் பிடியாணை பிறப்பிப்பதற்கு நீதவான் நீதிமன்றத்திற்கு அதிகாரமிருப்பதை நீதவான் சுட்டிக்காட்டினார். ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தினூடாக பிடியாணை உத்தரவை பெற்றுக்கொள்ள முடியாமை காரணமாக அவர் சார்பிலான சட்டத்தரணிகள் குழு இந்த வேண்டுகோளை விடுத்திருந்தது.

இந்த கோரிக்கை விடுக்கப்பட்ட சமயத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரச தரப்பு பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் டிலீப பீரிஸ், ரஞ்சன் ராமநாயக்க கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் பிணை கோரிக்கையை விடுப்பதற்கு சட்டத்தரணிகளுக்கு அதிகாரம் கிடையாதென சுட்டிக்காட்டினார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட நபர் நீண்ட விசாரணைக்குப் பின்னரும் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னருமே கைதுசெய்யப்பட்டிரக்கிறார். அதன் பிரகாரம் நீதிமன்றம் அவரை தடுத்து வைப்பதற்கு உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவை இரத்துச் செய்யக் கோருவது ஏற்றுக்கொள்ள முடியாதென நீதவான் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் தண்டனைக் கோவையில் தெரிவிக்கப்பட்டதன் படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் மேல் நீதிமன்றமே விசாரிக்கவேண்டியிருந்தாலும் கூட விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து மேல் நீதிமன்றம் அறிக்கைகளை சமர்ப்பிக்க முடியும்.

மேல் நீதிமன்றமென்பது சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கமையவே நடந்துகொள்ளக்கூடிய இடம் என்பதையும் நீதவான் இங்கு சுட்டிக்காட்டினார். இதேவேளை சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பில் பிரதி பிரதி சொலிஸ்டர் ஜெனரால் திலிப் பீரிஸ் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரமே நீதவான் இறுவட்டுக்களைகுற்றப்புப் புலனாய்வு பிரிவுக்கு சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

தெரண, ஹிரு, சுவர்ணவாஹினி உள்ளிட்ட ஊடக நிறுவனங்களுக்கு மேற்படி உத்தரவை நீதவான் பிறபித்தார்.

நீதிமன்றத்தின் கௌரவத்தை பாதுகாப்பதற்காக இத் தீர்மானத்தை எடுத்தாகவும் நீதிமன்றத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதற்காக உச்ச நீதிமன்றின் கருத்தை அறிய எதிர்பார்ப்பதாகவும் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலிப் பீரிஸ் கூறினார்.

வெளிப்படையான நீதிமன்றில் அரச அதிகாரி ஒருவருக்கு கருத்துகளை முன்வை முடியும். நீதிமன்றுக்கு வேறுவிதமான கருத்துகளை தெரிவித்துவிட்டு வெளியில் வீரர்களாக மாற சிலர் முற்படுகின்றனர்.

இந்த சம்பவத்தின் பின்னராவது இவற்றுக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும். நீதிமன்றம் மற்றும் சட்டத்திற்கு அப்பால் எவரும் உயரியவர் அல்ல.

அவ்வாறு செய்யாவிடின் நாட்டின் சமூக கட்டமைப்பை கொண்டுசெல்ல முடியாது.

நீதிமன்றின் கௌரவத்தை பாதுகாப்பது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுத்து வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் அன்றைய தினம் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

 

 

Sat, 01/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை