கில்கிறிஸ்ட் - மார்க் வோ சாதனையை முறியடித்த பிஞ்ச் - வோர்னர் ஜோடி

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடக்க விக்கெட்டுக்கு 100ஓட்டங்களுக்கு மேல் அடித்த ஆரோன் பிஞ்ச் - டேவிட் வோர்னர் சாதனை படைத்துள்ளது.

இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வன்கடே மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 255 ஓட்டங்களுக்கு சுருண்டது. பின்னர் 256 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச், டேவிட் வோர்னர் ஆகியோர் களம் இறங்கினர்.

இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி எளிதாக 100 ஓட்டங்களை தாண்டியது. ஒருநாள் கிரிக்கெட்டில் இருவரும் இணைந்து 100 ஓட்டங்களை தாண்டுவது இது 9-வது முறையாகும்.

இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி தொடக்க ஜோடி அதிக முறை 100 ஓட்டங்களை தாண்டியதில் ஆரோன் பிஞ்ச் - வோர்னர் ஜோடி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.

கில்கிறிஸ்ட் - ஹைடன் ஜோடி 16 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. கில்கிறிஸ்ட் - மார்க்வோ ஜோடி 8 சதங்களுடன் 3-வது இடத்திலும், 7 சதங்களுடன் டேவிட் பூன் - மார்ஷ் ஜோடி 4-வது இடத்திலும் உள்ளது.

Thu, 01/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை