அமெரிக்க தூதரகம் அருகில் மீண்டும் ரொக்கெட் தாக்குதல்

ஈராக் தலைநகர் பக்தாதின் அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் மீண்டும் இரு ரொக்கெட் குண்டுகள் விழுந்துள்ளன.  

அதிக பாதுகாப்புக் கொண்ட பசுமை வலயப் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு கட்யூசா ரொக்கெட்டுகள் விழுந்ததாக ஈராக் உள்துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சுமார் 10கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட இந்த வலகத்தின் மீது கடந்த ஒருசில தினங்களில் ரொக்கெட் மற்றும் மோட்டார் குண்டு தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.  

இந்த தாக்குதல் தொடர்பில் ஈரான் ஆதரவு போராட்டக் குழுக்கள் மீது குற்றம்சாட்டப்படுகிறது. அமெரிக்க வான் தாக்குதலில் ஈரானிய போராட்டக்குழு தலைவர் கொல்லப்பட்டதற்கு பழிதீர்ப்பதாக ஈரான் ஆதரவு அசைப் அஹ்ல் அல் ஹக், ஷியா போராட்டக் குழு தலைவர் கைஸ் அல் கஸ்ஸாலி அறிவித்து சில மணி நேரத்திலேயே இந்த புதிய ரொக்கெட் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

Fri, 01/10/2020 - 09:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை