உலக சுகாதார அமைப்பு அவசரக் கூட்டம்

சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வகைக் கிருமி பரவி வருவதை அடுத்து, அவசரக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய உலகச் சுகாதார அமைப்பு ஆலோசித்து வருகிறது.

தற்போது தாய்லந்தில் ஒரு பெண், கொரோனா வகைக் கிருமியால் பாதிக்கப்பட்டதை உறுதி செய்த அமைப்பு, அவ்வாறு தெரிவித்தது.

வூஹான் நகரிலுள்ள கடலுணவுச் சந்தையிலிருந்து புதிய வகைக் கிருமி பரவியிருக்கக்கூடும் என்ற உலகச் சுகாதார அமைப்பு, அது மற்ற நாடுகளுக்குப் பரவியதில் ஆச்சரியமில்லை என்றது. கொரோனா வகைக் கிருமியால் இதுவரை ஒருவர் உயிரிழந்திருப்பதோடு சுமார் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா கிருமி, சார்ஸ் நோய்க்குக் காரணமான கிருமி வகையைச் சேர்ந்தது என்று சீனா கூறுகிறது.

Wed, 01/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை