விளையாட்டு நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கல்

மட்டக்களப்பு சலாமா கழகத்தின் 4ஆவது வருட ஒன்று கூடல் (26) ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை பாசிக்குடாவில் நடைபெற்றது.

மட்டக்களப்பு சலாமா கழகத்தின் தலைவர் எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்று கூடலில் மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாயலின் தலைவர் முகம்மட் சியாம், செயலாளர் முகம்மட் அமான் நழீமி உட்பட மட்டக்களப்பு சலாமா விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்கள் மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாயலின் நிருவாக உறுப்பினர்கள் மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த ஒன்று கூடலின் போது கலாசார விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் விரிவுரையாளர் பாஸில் முகைதீனின் விஷேட உரையும் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் சமூக சேவையில் கலாநிதிப்பட்டம் பெற்ற மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாயலின் தலைவருமான முகம்மட் சியாம் மற்றும் அமெரிக்கப் கல்கலைக்கழகம் ஒன்றினால் வர்த்தகத்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற மட்டக்களப்பு வர்த்தகர் எம்.அஸீம் ஆகியோருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் வர்த்தகர் சிலரும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

விளையாட்டு நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

Fri, 01/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை