லோயாலா கல்லூரி நீச்சல் போட்டி; சாஹிரா கல்லூரி இரண்டாமிடம்

நீர்கொழும்பு லோயாலா கல்லூரியினால் ஏற்பாடு செய்த 2020 நீச்சல் போட்டியில் சம்பியன் பட்டத்தை லோயாலா கல்லூரி பெற்றுக் கொண்டதுடன், கொழும்பு சாஹிரா கல்லூரி இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.

சுமார் 30 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் கலந்து கொண்ட இந்த நீச்சல் போட்டியில் 300இற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 13 வயதுக்குட்பட்டோருக்கிடையிலான போட்டியில் ரைஹனும் 17 வயதுக்கு மேட்பட்டோருக்கான போட்டியில் சஜா அஹமட்டும் சம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொண்டதுடன் இருவரும் சாஹிரா கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தியமை விசேட அம்சமாகும். இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்ட சாஹிரா கல்லூரி மாணவர்களுடன் பயிற்றுவிப்பாளர் பவாஸ் கிண்ணத்துடன் காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

Fri, 01/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை