பார்சிலோனா அதிர்ச்சித் தோல்வி

ஸ்பெயின் லா லிகாவில் முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனா அணி வலன்சியா அணிக்கு எதிரான போட்டியில் 2–0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியை சந்தித்தது.

இதன் மூலம் பார்சிலோனாவின் புதிய முகாமையாளர் குயின் ஸ்டெயின் தனது முதல் தோல்வியை சந்தித்ததோடு வலன்சியா தனது சொந்த மைதானமான மஸ்டெல்லா அரங்கில் பார்சிலோனா அணியை 2007 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறை தோற்கடித்துள்ளது.

முதல் பாதி ஆட்டத்தில் பார்சிலோனா ஆதிக்கம் செலுத்தியதோடு 70 வீதமான நேரம் பந்து அந்த அணியின் கால்களிலேயே சுற்றியது. எனினும் அந்த அணியால் கோல் பெறும் வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை.

எனினும் இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே பார்சிலோனா கோல் எல்லையை முற்றுகையிட்ட வலன்சியா அந்த சந்தர்ப்பத்தைக் கொண்டு கோல் புகுத்தியது.

மக்சி கோமஸ் மின்னல் வேகத்தில் உதைத்த பந்து மார்க் அக்ட்ரே டெர் ஸ்டெஜனுக்கு பிடிக்க முடியாமல் வலைக்குள் சென்றது.

பதில் கோல் திருப்புவதற்கு லியோனல் மெஸ்ஸி பல சந்தர்ப்பங்களில் நெருங்கி வந்தபோதும் பார்சிலோனாவுக்கு எந்த அதிர்ஷ்டமும் கிட்டவில்லை.

இந்நிலையில் மீண்டும் செயற்பட்ட மெக்சி கோமஸ், பெர்ரன் டொர்ரஸ் வழங்கிய பந்தை கீழ் வலது மூலையின் ஊடாக கோல் திருப்பி வலன்சியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

Mon, 01/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை