பொதுத் தேர்தல் வெற்றி; பங்காளிக் கட்சிகளுடன் பொதுஜன பெரமுன ஆராய்வு

பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது மற்றும் கூட்டணியின் பொதுச் சின்னம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளிடையே தீர்க்கமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றுமுன்தினம் அலரிமாளிகையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.  

பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், பிவிதுறு ஹெல உருமய, தேசிய சுதந்திர முன்னணி, தேசிய காங்கிரஸ்,ஜனநாயக இடதுசாரிகள் முன்னணி, பொதுஜன ஐக்கிய முன்னணி உட்பட 10இற்கும் அதிகமான கட்சிகள் கலந்து கொண்டன.  

இதன்போது பொதுத் தேர்தலை வெற்றிகொள்வது, மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் கூட்டணி உடன்படிக்கையை தயாரிப்பது குறித்தும் ஆராயப்பட்டன. அதேபோன்று தேர்தல் சின்னம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் கட்சித் தலைவர்கள் கலந்துரையாடினர். 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 01/30/2020 - 09:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை