மட்டு. மாவட்ட அபிவிருத்தியின் ஊடாக எமது மக்களின் துயர் நீக்கப்பட வேண்டும்

கிழக்கு ஆளுநரிடம் ஸ்ரீநேசன் எம்பி தெரிவிப்பு

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தியின் ஊடாக எமது மக்களின் துயரங்கள் நீங்க வேண்டும். அதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் உதவ முன்வரவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ. ஸ்ரீநேசன் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத்தி

டம் கோரிக்கை முன்வைத்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ. ஸ்ரீநேசன் ஆளுநரை நேரில் சந்தித்து இவ்வாறு கோரிக்கை விடுத்தார். இச்சந்திப்பு ஆளுநரின் திருகோணமலை அலுவலகத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்புத் தொடர்பாக ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் தெரிவிக்கையில்,

கிழக்கிழுள்ள வளங்களை அபிவிருத்தியடையச் செய்வதாலும், அம் மாவட்டத்தில் காணப்படுகின்ற பொருளாதார சமூக, கலாச்சார, நிர்வாக குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படுவதாலும், மக்களின் துயரங்களை தீர்க்க முடியுமென மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.ஸ்ரீநேசன்,கருதுகிறார். இது தொடர்பாகவே கலந்துரையாடப்பட்டுள்ளது. பல அடிப்படை விடயங்களை சுட்டிக்காட்டியதுடன் தெளிவுபடுத்தினார். மட்டு. மாவட்டத்தின் அபிவிருத்தியை கருத்திற்கொண்டும் அவர் எடுக்கின்ற முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

அவர் முன் வைத்த கோரிக்கைகளில் பல எனது அதிகாரப் பரப்பிற்குள் உட்பட்டவை, அவைகளை தீர்த்து வைக்க முடியும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

 

புளியந்தீவு குறூப் நிருபர்

Fri, 01/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை