ஹொங்கொங் வலைப்பந்தாட்ட தொடரில் இலங்கை அணியில் மூன்று புது முகங்கள்

ஹொங்கொங்கில் நடைபெறவுள்ள நான்கு நாடுகள் கலந்து கொள்ளும் வலைப்பந்தாட்ட தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை அணியில் மூன்று புது முக வீராங்கனைகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். மந்திரா ஷாருனி, ஷமோர்தி அபேகுணவர்தன, துஷானி பண்டார ஆகியோரே இக்குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள மூன்று வீராங்கனைகளாவர்.

பல வருடங்களுக்குப் பின் காயத்திலிருந்து மீண்டுள்ள கோல் சூட்டர் திசலா அல்கம மீண்டும் அணியில் இணைந்துள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற ஆசியத் தொடர், சர்வதேச வலைப்பந்தாட்டத் தொடர்களில் இவர் காயம் காரணமாக இணைத்துக் கொள்ளப்படவில்லை. 2018ம் ஆண்டு ஆசிய கிண்ணத் தொடரை வெல்வதற்கு உறுதுணையாகவிருந்த அணியின் தலைவி ஷதுரங்கி ஜயசூரிய தற்போதைய வலைப்பந்தாட்ட பயிற்சி முகாமில் இல்லாததன் காரணமாக ஹொங்கொங்கில் நடைபெறவுள்ள தொடருக்கு புதிய தலைவர் ஒருவரையும் தெரிவு செய்யவுள்ளதாக வலைப்பந்தாட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேசிய வலைப்பந்தாட்ட பயிற்சி முகாமிலிருந்த 36 வீராங்கனைகளில் 20 வீராங்கனைகளை தெரிவு செய்ததோடு கடந்த வாரம் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற பயிற்சி, உடற் தகுதி சோதனையின் பின் அணியின் இறுதி 15 விராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டனர். ஜூன் மாதம் நடைபெறவுள்ள அசியக் கிண்ண சம்பியன் ஷிப் தொடருக்கான பயிற்சி போட்டியாக ஹொங்கொங்கில் பெப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறவுள்ள தொடரில் இலங்கை, கென்யா, தாய்லாந்து,

ஹொங்கொங் அகிய நான்கு நாட்டு அணிகளும் கலந்துகொள்ளவுள்ளன.

விளையாட்டு அமைச்சின் அனுமதியைப் பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ள வீராங்கனைகளின் பெயர் விபரம் வருமாறு:

கயனி திசாநாயக்க, தர்ஷனி அபேவிக்ரம, கயங்ஜலி அமரவங்ச, நவுஜலி ராஜபக்ஷ, ஹசிதா மெண்டிஸ், திலினி வத்தே கெதர, துலங்கா தனங்ஜி, தர்ஷினி சிவலிங்கம், காயத்திரி கௌஷல்யா, மந்திரா ஜாருனி, துஷானி பண்டார, துலன்கி வன்னிதிலக்க, சமோதி அபேகுணவர்தன, திசாலா அல்கம, சுரேகா குமாரி.

Wed, 01/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை