சிறுபான்மை சமூகங்களின் ஏக பிரதிநிதிகள் மக்களுக்காக எதையும் செய்யவில்லை

தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஏகபிரிதிநிதிகள் எனக் கூறித்திரிவோர், சிறுபான்மைச் சமூகங்களுக்காக எதையும் செய்யவில்லை என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகளுடனான சந்திப்பு கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஹரிதரன் கிரி தலைமையில் தனியார் விடுதியில் நடைபெற்றது.இங்கு உரையாற்றுகையிலே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.  தொடர்ந்து உரையாற்றி அமைச்சர்:

தமிழ் மக்களுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம்களுக்காக முஸ்லிம் காங்கிரஸும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் எதையுமே செய்யவில்லை.இன்னும் பத்து ஆண்டுகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைப்பது பற்றி யோசிக்கவே முடியாது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட்டதாலே சிறிலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சி உருவாகியது.17 வருடங்கள் காத்திருந்தே ஐக்கிய தேசிய கட்சியிடமிருந்து சிறிங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியைப் பிடித்தது.அந்த ஆட்சி 20வருடங்கள் நீடித்தது.இருபது வருடங்கள் எம்மிடமிருந்த ஆட்சியை ஐக்கிய தேசிய கட்சியே இல்லாமல் செய்தது.சிறிலங்கா சுதந்திர கட்சியியாலே தமிழ், முஸ்லிம் தலைவர்களை உருவாக்க முடியும்.பொதுஜன பெரமுனவால் அதைச் செய்ய முடியாது.சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒரு போதும் இனவாதம் பேசியதில்லை. அதன் பிரதி தலைவர்களாக தொடர்ந்தும் தமிழ், முஸ்லிம் தலைவர்களே இருந்துள்ளனர்.

கடந்த 5 வருடங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களுக்கு எதையுமே செய்யவில்லை.அடுத்த பத்து வருடங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பால் எதுவுமே செய்ய முடியாது. ஏனெனில் எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இணைந்த ஆட்சியே தொடரப்போவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு குறூப் நிருபர்    

Mon, 01/27/2020 - 09:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை