டெஸ்ட் போட்டி நான்கு நாட்களாக குறைப்பு இங்கிலாந்து , அவுஸ்திரேலியா ஆதரவு

டெஸ்ட் போட்டியினை நான்கு நாட்களாக குறைக்கும் எதிர்கால திட்டத்திற்கு, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை ஆதரவு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், 4 நாள் டெஸ்ட் போட்டியை நடத்தும் சர்வதேச கிரிக்கெட் சபையின் பரிந்துரைக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். அதே நேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டின் பாரம்பரியத்தை சவால் செய்யும் வகையிலான இந்த முடிவை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

4 நாள் டெஸ்ட்தான் நிலையான தீர்வை ஏற்படுத்தும் என்றும் நாங்கள் நம்புகிறோம். போட்டிக்கான திட்டமிடல், வீரர்களின் பணிச்சுமை குறை போன்ற தீர்வை ஏற்படுத்தும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதற்கு சிலர் தங்களது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் நதன் லயன், அதிருப்தியை வெளியிட்டுள்ளார். ‘சர்வதேச கிரிக்கெட் சபையின் இந்த திட்டம் கேலிக்குரியது’ என நதன் லயன் கூறியுள்ளார்.

மேலும், அதேபோல் அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சௌரவ் கங்குலி, ‘ஐசிசியின் பரிந்துரையை முழுவதுமாக ஆராய்ந்த பின்னர்தான் கருத்துக் கூற இயலும்’ என்று தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் ரி-20, ரி-10 போன்ற குறுகிய ஓவர்களை கொண்ட கிரிக்கெட் தொடர்களின் வருகையால் டெஸ்ட் போட்டிக்கான மவுசு குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ரி-20 போட்டி விறுவிறுப்பாகவும், குறைந்த நேரத்தில் நடைபெறுவதால் இரசிகர்கள் ரி-20 கிரிக்கெட்டை அதிகமாக விரும்புகின்றனர்.

எனினும், டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக பலராலும் விமர்சிக்கப்பட்ட நிலையில், சர்வதேச கிரிக்கெட் சபை பகல்-இரவு டெஸ்டை அறிமுகப்படுத்தியது. இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இரசிகர்கள் திரண்டு வந்து டெஸ்டை இரசித்தனர்.

இந்த நிலையில் 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை 4 தினங்களாக குறைக்க ஐ.சி.சி. பரிசீலித்து வருகிறது.

2023ஆம் ஆண்டு தொடங்க உள்ள டெஸ்டை சம்பியன்ஷிப் தொடரில் இருந்து 4 நாள் டெஸ்டை கட்டாய நடைமுறைக்கு கொண்டுவர ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பல நாட்கள் கூடுதலாக கிடைக்கும். இந்த நாட்களில் கூடுதலாக சர்வதேச தொடர்களை நடத்தி வருமானம் ஈட்டலாம் என ஐசிசி நினைக்கிறது.

4 நாள் டெஸ்ட் கட்டாயமாக்கப்படும் பட்சத்தில் 2 நாட்கள் விதிமுறையில் மாற்றம் செய்யப்படும். தற்போது 5 நாள் டெஸ்டில் நாள் ஒன்றுக்கு அதை வைத்து வேறு போட்டிக்களை நடத்தி கொள்ளலாம் என்பது ஐ.சி.சி. யின் வருங்கால திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது.

மேலும், ஓவர்களின் எண்ணிக்கையும், அதிகரிக்கப்படுகிறது. வழக்கமாக டெஸ்டில் நாள் ஒன்றுக்கு 90 ஓவர் வீசப்படும். இது 98 ஓவர்களாக அதிகரிக்கப்படும். இதன்மூலம் 58 ஓவர்களை மட்டுமே இழக்க முடியும். கூடுதல் ஓவர்களை வீசுவதன் மூலம் டெஸ்ட் முடிவில் பாதிப்பு ஏற்பாடாது என்று கூறப்படுகிறது.

Fri, 01/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை