பாதுகாப்பு பெட்டகத்திலுள்ள ஆதாரங்களை சமர்ப்பிப்பேன்

என்னை விளக்கமறியலில் வைத்துள்ளதால் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள குரல் பதிவு ஆதாரங்களை சபையில் சமர்ப்பிக்க முடியாதுள்ளது.இருநாள் பிணை வழங்கினால் அவற்றை சமர்ப்பிக்க தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். குரல் பதிவு இதுவரை சபையில் சமர்ப்பிக்கப்படாதது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது,

என்னிடம் 120,000 குரல் பதிவுகள் உள்ளன.பொலிஸார் எனது 8 ஹார்ட் டிஸ்குகள் 4 கைபேசிகள் மற்றும் மடிக்கணனி என்பவற்றை எடுத்துச் சென்றார்கள். இது தொடர்பான இறுவட்டுக்களை பாதுகாப்பாக வங்கி பெட்டகத்தில் வைத்துள்ளேன்.என்னை விளக்கமறியலில் வைத்துள்ளதால் அவற்றை வெளியில் கொண்டுவர முடியாதுள்ளது.அரசாங்கத்திற்கு எதிரான இறுவட்டுக்களை 6 மணிக்கு முன்னர் சபையில் சமர்ப்பிப்பேன்.அரசாங்கம் எனது குரல் பதிவுகளை பயன்படுத்தி வருகிறது.அவற்றை பெற சிங்கப்பூருக்கும் சென்று உதவி கோரியுள்ளனர்.

நான் வெளியிலிருந்தால் உடனடியாக இறுவட்டுக்களை சபையில் சமர்ப்பிப்பேன்.எனது செயலாளர் ஊடாக சில குரல்பதிவுளை வழங்க இருக்கிறேன்.அவர் அவற்றை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.எனக்கு 2 நாள் பிணை வழங்கினால் குரல் பதிவு ஆதாரங்களை சமர்ப்பிப்பேன்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Thu, 01/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை