லிவர்பூல் தொடர்ந்து ஆதிக்கம்

டொட்டன்ஹாம் அணியை கடுமையாக போராடி 1–0 என்ற கோல் கணக்கில் வென்ற லிவர்பூல் அணி ப்ரீமியர் லீக்கில் 16 புள்ளிகள் முன்னிலை பெற்று முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.

முதல் பாதியில் மொஹமட் சலாஹ் உதவ ரொபார்டோ பர்மினோ பெற்ற கோல் லிவர்பூல் அணியின் வெற்றி கோலாக இருந்ததோடு அந்த அணி கடந்த 30 ஆண்டுகளில் தனது முதல் லீக் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை மேலும் அதிகரித்துக்கொண்டுள்ளது.

இதன்படி லிவர்பூல் அணி இந்தப் பருவத்தில் இதுவரை ஆடிய 21 போட்டிகளில் மொத்தம் 61 புள்ளிகளை பெற்றுள்ளது. ஐரோப்பாவின் ஐந்து முக்கிய லீக்குகளிலும் இந்த மைல்கல்லை எட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று லிவர்பூலின் 21 போட்டிகளில் அந்த அணி 20 போட்டிகளில் வென்றதும் ஐரோப்பாவின் முன்னணி ஐந்து லீக்குகளிலும் இதுவே முதல் முறையாகும்.

Mon, 01/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை