இலங்கையுடனான முதல் டெஸ்ட்: சிம்பாப்வே அணி நிதான ஆட்டம்

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் சிம்பாப்வே அணி விக்கெட்டுகளை காத்துக்கொண்டு நிதானமாக துடுப்பெடுத்தாடி வருகிறது.

ஹராரே விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியின் தேனீர் இடைவேளையின்போது தனது முதல் இன்னிங்ஸை ஆடி வரும் சிம்பாப்வே அணி ஒரு விக்கெட்டை இழந்து 108 ஓட்டங்களை பெற்றுள்ளது.

2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிம்பாப்வே அணி தனது சொந்த மைதானத்தில் ஆடும் முதல் டெஸ்ட் போட்டியாகவே இந்த டெஸ்ட் போட்டி ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சோன் வில்லியம்ஸ் தலைமையிலான சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இறுதியாக சிம்பாப்வே அணி கடந்த 2018 டிசம்பர் மாதம் பங்களாதேஷ் அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடியதன் பின்னர் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலத்திற்கு பின்னர் அடுத்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியுடன் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சர்வதேச கிரிக்கெட் கெளன்சிலினால் சிம்பாப்வே அணி தடைக்கு உள்ளானதன் பின்னர் மீண்டும் கிரிக்கெட் போட்டியொன்றில் விளையாடுகின்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த டெஸ்டில் சிம்பாப்வே அணியில் கெவின் கசுஸா, ஐன்ஸ்லி என்ட்லோவ் மற்றும் விக்டர் நியாச்சி ஆகிய மூன்று வீரர்கள் டெஸ்ட் அறிமுகம் பெற்றனர். மறுபுறம் பாகிஸ்தான் தொடரில் ஆடாத இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் அணிக்கு திரும்பியுள்ளார். திமுத் குருணாரத்னவின் தலைமையிலான இலங்கை அணியில் அனுபவ வீரர் அஞ்சலோ மத்தியூசும் இணைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சிம்பாப்வே அணிக்கு பிரின்ஸ் மசவுரா மற்றும் கெவின் கசுசா சிறந்த ஆரம்பம் ஒன்றை பெற்றுக்கொடுத்தனர். மிக நிதானமாக ஆடிய இருவரும் நேற்றை தினத்தின் பெரும்பாலான நேரம் விக்கெட்டை தக்கவைத்துக் கொண்டனர்.

இதன்படி நேற்று தேனீர் இடைவேளைக்காக ஆட்டம் நிறுத்தப்படும்போது கசுசா 48 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். மசவுரா 55--- ஓட்டங்களை பெற்றார். எம்புல்தெனிய ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இன்று போட்டியின் இரண்டாவது நாளாகும்.

Mon, 01/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை