மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் உறவுப் பாலமாக இருப்பேன்

வேதனைகளையும், வலிகளையும் நன்குணர்ந்தவர் ஜனாதிபதி

வடமாகாண மக்கள் நிறைய வலிகளுடனும், வேதனைகளுடனும், இருக்கின்றார்கள். அவற்றை ஆற்றுப்படுத்த வேண்டிய ஒரே ஒரு தேவை தான் உமக்கு இருக்கின்றதென ஜனாதிபதி என்னை பதவியில் அமர்த்தியிருக்கிறார் என வட மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் நேற்றுத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பணிப்புக்கமைய அரசியல் கொள்கைகளுக்கு அப்பால், முரண்பட்ட கருத்துகளுக்கு அப்பால், இனமத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால், வர்க்க முரண்பாடுகளுக்கு அப்பால் இந்த மக்களுக்கு சேவையாற்ற அனைவரும் முன்வரவேண்டுமென்றும் குறிப்பிட்டார். குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் ​ஆளுநர் கடமையை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்ட பின்னர், நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார். மேலும் உரையாற்றுகையில்,

வடமாகாண மக்களின் உணர்வுகளுக்காக, வடமாகாண மக்களின் தேவைகளுக்காக, வடமாகாண மக்களின் ஏக்கங்களுக்காக, ஜனாதிபதி இந்த பதவியை தரவிரும்பியுள்ளதாக நான் பார்க்கின்றேன்.எனக்கு இந்தப் பதவியை தந்தபோது, எனக்கு சொல்லப்பட்ட விடயம். வடமாகாண மக்கள் நிறைய வலிகளுடனும், வேதனைகளுடனும், காயங்களுடனும், இருக்கின்றார்கள். அவற்றை ஆற்றுப்படுத்த வேண்டிய ஒரே ஒரு தேவை தான் உமக்கு இருக்கின்றது. அந்த மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அந்த மக்களுக்கு இதுவரை கிடைக்காமல் போயுள்ள எந்த விடயங்களோ, அவற்றை எல்லாம் செய்து முடிப்பதற்கான சகல அதிகாரத்தையும், ஒத்துழைப்பையும், இந்த ஜனாதிபதி செயலகம் வழங்கும் என்ற உத்தரவாதமும் தரப்பட்டது.

 

 யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Fri, 01/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை