கண்காட்சி போட்டியில் ஆடும் ஆஸி. முன்னாள் நட்சத்திரங்கள்

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீ, நிவாரணத்திற்கு நிதி சேர்ப்பதற்காக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கண்காட்சி கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆடவுள்ளனர்.

முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சேன் வோர்ன் மற்றும் ரிக்கி பெண்டின் இந்த போட்டியில் ஆடுவதாக அறிவித்துள்ளனர்.

இவர்களுடன் அடம் கில்கிறிஸ்ட், பிரெட் லீ, மைக்கல் கிளார்க், சேன் வொட்சன் மற்றும் அவுஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் ஆகியோரும் இதில் பங்கேற்கவுள்ளனர்.

பெப்ரவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் இருந்து கிடைக்கு இலாபம் மற்றும் நிதி அனைத்தும் காட்டுத் தீ நிவாரண உதவிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீயினால் 27 பேர் உயிரிழந்திருப்பதோடு 2000க்கும் அதிகமான வீடுகள் அழிந்துள்ளன. இதற்கு நிதி சேர்ப்பதற்காக சேன் வோர்ன் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் அணிந்த பச்சை நிற தொப்பியை ஏலம் விட்டு ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை சேகரித்தார்.

Mon, 01/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை