கண்டி கேட்வே கல்லூரியின் இருபது வருட பூர்த்தியை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள்

கண்டி கேட்வே கல்லூரியின் இருபது வருட பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு இன, மத, மொழி, கலாசாரப் பின்னணிகளைக் கொண்ட பாடசாலைகள் பங்குபற்றும் விளையாட்டு சுற்றுப் போட்டிகளை கேட்வே கல்லூரி நிர்வாகம் கண்டியில் ஒழுங்கு செய்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி மற்றும் 6 ஆம் திகதிகளில் கண்டியில் மேற்படி போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கேட்வே கல்லூரியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு மற்றும் போட்டி ஏற்பாட்டு அறிமுக விழாவில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக கேட்வே பாடசாலைகள் குழுமத்தின் தலைவர் வைத்திய கலாநிதி ஹர்ஷ அலஸ் தெரிவித்ததாவது-

கேட்வே கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 20 வருட பூர்த்தியை முன்னிட்டு இப்போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இதில் இருவகையான போட்டித் தொடர்கள் நடத்தப்படவுள்ளன. முதலாவதாக பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த சவால் கிண்ணப் போட்டி, அழைப்பு விடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகள்.

குறுகிய காலப் போட்டிகளான கூடைப்பந்தாட்டப் போட்டி, ஆண்கள் பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்து​ போட்டி, பெண்கள் பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த போட்டியாக நடத்த உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆண்கள் கூடைப்பந்தாட்டப் போட்டி அசோக்க ஹேரத்- ரனில் மித்தியாகொட சவால் கேடயப் போட்டி என அழைக்கப்படும். இது கேட்வே கல்லூரிக்கும், புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரிக்குமிடையே 3ஆம் திகதி கேட்வே கல்லூரி மைதானத்தில் இடம்பெறும்.

பெண்கள் வலைபந்துப் போட்டியானது ரோகினி அலஸ்- சோமாக்குமாரி சமரசிங்க சவால் கேடய போட்டி என அழைக்கப்படும். இது கேட்வே கல்லூரிக்கும் கண்டி ஹில்வூட் கல்லூரிக்குமிடையே 6ஆம் திகதி பல்லேகலையிலுள்ள திருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும்.

அதேநேரம் திருத்துவக் கல்லூரிக்கும் கேட்வே கல்லூரிக்குமிடையிலான உதைபந்தாட்டப் போட்டி 6ஆம் திகதி பல்லேகலை றகர் மைதானத்தில் நடைபெறும். வெற்றி பெறும் அணிக்கு ஆர்.ஐ.டி. அலஸ்- அரிலென்ட் ஜோன்ஸ் சவால் கேடயம் வழங்கப்படும். இது அழைப்பு கல்லுாரி போட்டியாக அமையும்.

அதே போல் பெண்கள் கல்லூரிகளுக்கான அழைப்பு போட்டியாக கொழும்பு கேட்வே கல்லூரிக்கும் கண்டி பெண்கள் உயர் கல்லூரிக்கு மிடையே 6 ஆம் திகதி பல்லேகலை றகர் மைதானத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அக்குறணை குறூப் நிருபர்

Fri, 01/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை