கடும் காற்று; கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை!

புத்தளம் - கொழும்பு ஊடாக பேருவளை வரை கடும் காற்று!-Advisory for Strong Wind and Rough Seas

- புத்தளம் -> கொழும்பு -> பேருவளை
- மாத்தறை -> அம்பாந்தோட்டை -> பொத்துவில்

நாட்டின் மேற்கு திசையிலுள்ள ஆழமானற் மற்றம் ஆழமற்ற கடல் பிரதேசம் தொடர்பில், வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முன்னறிவிப்பு எச்சரிக்கை மையத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளை (13) காலை 8.30 மணி வரையான காலப் பகுதியில் புத்தளம் முதல் கொழும்பு ஊடாக பேருவளை வரையான கடற்கரையை அண்டிய கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. வரை அதிகரிக்கலாம் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அடிக்கடி கடல் கொந்தளிப்பு ஏற்படலாம் எனவும் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாத்தறை முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரையை அண்டிய கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ. வரை அதிகரிக்கலாம் எனவும் இதன்போது குறித்த கடல் பகுதி அடிக்கடி கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே மீன்பிடி சமூகம் மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Sun, 01/12/2020 - 12:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை