இறக்காமத்தில் அபிவிருத்தி பணிகள் மக்களிடம் கையளிப்பு

இறக்காமம் பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் சுமார் 70.8 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் 19 இறக்காமம் உப தவிசாளர் மௌலவி ஏ.எல்.நௌபர் தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு அபிவிருத்திப் பணிகளை மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார்.

இதன் போது இறக்காம்ம் அமிர்அலிபுர வித்தியாலய நுளைவாயில், 17 வீதி அபிவிருத்திப் பணிகள், வீட்டு நீரிணைப்பு 77, வீட்டு மின் இணைப்பு 75, பாடசாலைகளுக்கான மலசல கூட நிர்மாணம், பாடசாலை மைதான புனரமைப்பு, சிறுவர் பூங்கா, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 3 வீடுகள், உட்பட இன்னும் பல அபிவிருத்தி திட்டங்கள் பிரதம அதிதியால் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டன.

இந் நிகழ்வுக்கு கௌரவ அதிதிகளாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அப்துல்லா மஹ்றூப், இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் ஜே.கலீலுர் றஹ்மான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் உட்பட கட்சியின் மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

(ஹிங்குறாணை குறூப் நிருபர்)

Tue, 01/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை