ஐ.தே.க மோதல்: அரசுடன் இணைய பலர் முன்வருகை

அன்புடன் வரவேற்கத் தயார்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் மோதலால் அரசாங்கத்துடன் இணைவதற்கு பலர் முன்வந்துள்ளனர்.

இவ்வாறு வரும் ஐ.தே.க உறுப்பினர்களை அன்புடன் வரவேற்று ஆதரிக்க தயாராகவுள்ளதாக நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் முன்மாதிரி காரணமாக மட்டுமன்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நோக்கம் மற்றும் ஆட்சி முறையில் நாட்டம் கொண்டிருப்பதாலுமே ஐ.தே.க உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைய விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மஹியங்கனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அமைச்சர் நிமல்சிறிபாலடி சில்வா இங்கு மேலும் உரையாற்றுகையில்:

ஊழல் மோசடியில்லாத நாட்டை உருவாக்குவதே எமது இலக்கு. அதற்கு ஏற்றாற்போல கட்சி, நிறம் பேதமின்றி அரசாங்கத்துடன் இணைய வரும் ஐ.தே.க உறுப்பினர்களை,அன்புடன் வரவேற்க தயாராக உள்ளோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் மக்கள் மீதான வரிச்சுமை குறைக்கப்பட்டுள்ளது. உள்வாரி, வெளிவாரியென அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்கப்படவுள்ளது. க.பொ.த உயர்தரத்தில் சித்தியடையாத ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. கிராமப் புறங்களில் அபிவிருத்திகள் துரிதப்படுத்தப் படவுள்ளன. இவையாவற்றையும் முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Tue, 01/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை