அகில இலங்கை மேசைப் பந்து சம்பியன்சிப் போட்டி

புத்தளம் விசேட நிருபர்

அகில இலங்கை தரவரிசை படுத்தப்படாத மற்றும் புதியவர்களுக்கான மேசைப் பந்து சம்பியன்சிப் - 2019 ஆண்களுக்கான போட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் டிசம்பர் 29ம் திகதி இடம்பெற்றது.

இச்சுற்றுப் போட்டியில் சிறந்த வீரராக கண்டி தர்மராஜ கல்லூரியின் மதீச விக்ரமநாயக்கா தெரிவு செய்யப்பட்டார்.

இவர் தரவரிசைப் படுத்தப்படாத 15 வயதின் கீழ் ஆண்கள் ஒற்றையர் போட்டியிலும், 18 வயதின் கீழ் ஒற்றையர் மற்றும் ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியிலும் வெற்றி பெற்றார்.

இவர் பீ.என். பெஸ்டோன்ஜீ ஞாபகார்த்த சவால் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டார். இப்போட்டிகளில் பிரதம அதிதியாக ஹங்குரான்கெத்த சீ. சீ. கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி பீ. ஜீ. ஆர். ஜயதுங்க கலந்து சிறப்பித்தார்.

இறுதி முடிவுகள் - தரவரிசை படுத்தப்படாத திறந்த ஆண்கள் ஒற்றையர் போட்டி - கண்டி தர்மராஜ கல்லூரியின் மதீச விக்ரமநாயக்க, கேகாலை சென் மேரிஸ் கல்லூரியின் கவிந்து குமுதாஞ்சனவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 11/04 , 11/08

21 வயதின் கீழ் ஆண்கள் ஒற்றையர் போட்டி - போபிட்டி லெயோலோ கல்லூரியின் சித்தும் நிரஞ்ச, யாழ் மத்திய கல்லூரியின் ஜே. சிஜாம் ராஜாவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 11/09 , 11/03

18 வயதின் கீழ் ஆண்கள் ஒற்றையர் போட்டி - கண்டி தர்மராஜ கல்லூரியின் மதீச விக்ரமநாயக்க, போபிட்டி லெயோலோ கல்லூரியின் சித்தும் நிரஞ்சவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 11/06 , 12/10

15 வயதின் கீழ் ஆண்கள் ஒற்றையர் போட்டி - கண்டி தர்மராஜா கல்லூரியின் மதீச விக்ரமநாயக்கா, கேகாலை சென் மேரிஸ் கல்லூரியின் கவிந்து குமுதாஞ்சனவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 11/09 , 11/09

12 வயதின் கீழ் ஆண்கள் ஒற்றையர் போட்டி - குருநாகல் மலியதேவ கல்லூரியின் அமில உதார, குருநாகல் மலியதேவ கல்லூரியின் பிம்சர ரத்நாயக்காவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 11/07 , 11/09

10 வயதின் கீழ் ஆண்கள் ஒற்றையர் போட்டி - கேகாலை சென் மேரிஸ் கல்லூரியின் சவிந்த பசிந்து, அம்பலங்கொடை தேவானந்தா கல்லூரியின் சரித்த டி சில்வாவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 07/11 , 11/08 , 11/08

08 வயதின் கீழ் ஆண்கள் ஒற்றையர் போட்டி - கொழும்பு ஆனந்தா கல்லூரியின் மினுக தசநாயக்க, அம்பலங்கொடை தேவானந்தா கல்லூரியின் சரித்த டி சில்வாவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 12/10 , 11/06

இறுதி முடிவுகள் - புதியவர்கள்

21 வயதின் கீழ் ஆண்கள் ஒற்றையர் போட்டி - பேராதெனிய ரணபிம றோயல் கல்லூரியின் ரவிந்து விஜேசிங்க, கேகாலை சென் மேரிஸ் கல்லூரியின் யசித்த விக்ரமாராச்சியைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 11/05 , 11/08

18 வயதின் கீழ் ஆண்கள் ஒற்றையர் போட்டி - பேராதெனிய ரணபிம றோயல் கல்லூரியின் அரித பண்டார, பேராதெனிய ரணபிம றோயல் கல்லூரியின் திலான் சமீரவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 11/06 , 08/11, 11/06

15 வயதின் கீழ் ஆண்கள் ஒற்றையர் போட்டி - பேராதெனிய ரணபிம றோயல் கல்லூரியின் கவிஸ்க பவன், நாவலப்பிட்டி அனுருத்த கல்லூரியின் இசங்க மதுசானைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 02/11 , 11/09, 11/07

12 வயதின் கீழ் ஆண்கள் ஒற்றையர் போட்டி - நாவலப்பிட்டி அனுருத்த கல்லூரியின் இசங்க மதுசான், அநுராதபுரம் சென் ஜோசப் கல்லூரியின் நிசித்த விமுக்தியைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 13/11 , 11/05, 11/04

10 வயதின் கீழ் ஆண்கள் ஒற்றையர் போட்டி - நாவலப்பிட்டி அனுருத்த கல்லூரியின் சவிந்து ஹசங்க, ஹங்குரான்கெத்த சீ. சீ. கல்லூரியின் விணு தின்சரவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 11/08, 11/06

08 வயதின் கீழ் ஆண்கள் ஒற்றையர் போட்டி - கொழும்பு றோயல் கல்லூரியின் சந்திவ் குருவிட்ட, கேகாலை கே.கே. வித்தியாலயத்தின் தருஜ தேவ்நிதவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 11/08, 11/05

Wed, 01/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை