தேர்தலை வெற்றிகொள்ளும் வியூகங்களுக்கு முன்னுரிமை

ஐ.தே.கவின் செயற்குழு இன்று கூடுகிறது

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்கூட்டம் இன்று வியாழக்கிழமை மாலை மூன்று மணிக்கு கூடவுள்ளதாக கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலை இலக்குவைத்து முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படுமென்றும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடக மாநாட்டின் போதே அகிலவிராஜ் காரியவசம் இதைத் தெரிவித்தார். கட்சிக்குள் காணப்பட்ட முரண்பாடுகள் பெருமளவுக்கு தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அனைவரும் ஒருமித்துப் பயணிப்பதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளதென்றும் அவர் விளக்கமளித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:

கடந்த ஆண்டுக்கான செயற்குழுவின் பதவிக்காலம் 2019 டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்துவிட்டது. கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் காணப்பட்டதால் புதிய செயற்குழுவை நியமிப்பதில் தாமதமேற்பட்டது. கடந்த திங்கட்கிழமை செயற்குழுவைக் கூட் எதிர்பார்க்கப்பட்ட போதும் தவிர்க்க முடியாத காரணங்களால் அதைக் கூட்டத்தை கூட்ட முடியாமற் போனது. தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய இன்று வியாழக்கிழமை புதிய செயற்குழுவைக் கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எம். ஏ. எம். நிலாம்

Thu, 01/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை