டெங்கு ஒழிப்புக்கு 'ட்ரோன்' தொழில்நுட்பம் அறிமுகம்

ஆதர் சீ கிளார்க் நிறுவனம் தயார்

டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்காக ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள ஆதர் சீ கிளார்க் நிறுவனம் தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்தார். ஆதர் சி கிளார்க் நிறுவனத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். ஆதர் சீ கிளார்க் நிறுவன விஞ்ஞானிகள் 'ட்ரோன்' தொழில்நுட்பம் தொடர்பில் பல ஆய்வுகளை முன்னெடுத்துள்ளனர். இதற்கமை டெங்கு ஒழிப்புக்கும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து ஆராயுமாறு யோசனை முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பிலும் விஞ்ஞானிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.டெங்கு அபாயம் அதிகரித்துள்ளது.பாடசாலை, அரச நிறுவனங்கள், பாரிய கட்டடங்கள், வெற்றுக் காணிகள் என்பவற்றில் நீர் நிறைவது குறித்து ஆராய்வதற்கு புகைப்படங்களை பெறவும் மருத்துகளை தெளிக்கவும் 'ட்ரோன்' தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும். சுகாதார அமைச்சுடன் பேசி இது தொடர்பில் விரைவில் முறைமையொன்று தயாரிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

 

ஷம்ஸ் பாஹிம்

Wed, 01/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை