கிண்ணியா வைத்தியசாலையின் தேவை குறித்து கலந்துரையாடல்

கிண்ணியா தள வைத்தியசாலையில் தற்போது டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் வைத்தியசாலையின் உடனடித் தேவை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் நேற்று (14) கிண்ணியா தள வைத்திய சாலைக்குச் சென்று வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் அருள் குமரன் மற்றும் பதில் அத்தியட்சகர் ஏ.எம்.எம்.ஜிப்ரி ஆகியோருடன் கலந்துரையாடினார்.

கிண்ணியா தள வைத்திய சாலையில் நேற்று முன்தினம் (13) மாலை வரை 93 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இன்றும் சிலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

திருமலை மாவட்ட விசேட நிருபர்

Wed, 01/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை