ஹரி தம்பதி அரச குடும்ப பணிகளில் இருந்து நீக்கம்

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகியுள்ள ஹரி தம்பதி இனி இளவரசர், இளவரசி என்ற அரச பட்டத்தை பயன்படுத்த மாட்டார்கள் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 9 ஆம் திகதி அரசப் பதவிகளை துறந்து பொருளாதார ரீதியில் சுதந்திரமாக செயல்படப் போவதாக ஹரி தம்பதி அறிவித்தனர். அதை இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் பக்கிங்ஹாம் அரண்மனை தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ஹரி தம்பதி இனி அரசக் கடமைகளுக்கான பொது நிதியை பெறமாட்டார்கள் என்றும் அவர்களின் செயல்கள் இங்கிலாந்து ராணியை நேரடியாக பிரதிநிதித்துவப்படுத்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைகள் அனைத்தும் இந்தாண்டு வசந்த காலத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் பிரிட்டனில் அவர்களுக்கான குடும்ப வீடான ப்ரோக்மோர் கொட்டேஜ்ஜை புதுப்பிக்க மக்கள் வரிப்பணத்தில் இருந்து பெறப்பட்ட 2.4 மில்லியன் பவுண்ட்கள் நிதியை திரும்பிக் கொடுக்க ஹரி மற்றும் மேகன் முடிவெடுத்துள்ளதாகவும் பக்கிம்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தைப் பொறுத்தவரை அரசு எடுக்கும் முக்கிய முடிவுகளில் அரச குடும்பத்தின் பங்கும் இருக்கும். அரச குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அரசின் ஓர் அங்கமாகவே கருதப்படுகிறார்கள்.

Mon, 01/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை