சூரியனுக்கு முந்திய துகள்கள் கண்டுபிடிப்பு

விண்கல் ஒன்றை ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள், அதில் பூமியின் மிகப்பழமையான பொருளை கண்டுபிடித்துள்ளனர்.

1960களில் பூமியில் விழுந்த விண்கல்லுக்குள் இருக்கும் துகள்கள் 7.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எமது சூரிய குடும்பம் தோன்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே இந்த துகள்கள் தோன்றியுள்ளன.

எமது சூரியன் 4.6 பில்லியன் ஆண்டுகள் வயது கொண்டதாகும். எனவே எமது சூரியன் அல்லது சூரியக் குடும்பம் உண்மையாகும் முன்னரே இந்த துகள்கள் இருந்துள்ளன.

இந்த ஆய்வை நடத்திய குழு இது தொடர்பான விபரத்தை விஞ்ஞான சஞ்சிகை ஒன்றியில் வெளியிட்டுள்ளது.

நட்சத்திரங்கள் இறக்கும்போது உருவாகும் துகள்கள் விண்வெளி எங்கும் சிதறிச் செல்லும். இந்த சூரிய குடும்பத்திற்கு முந்திய துகள்கள் பின்னர் புதிய நட்சத்திரங்கள், கிரகங்கள், நிலவுகள் மற்றும் விண்கற்களாக உருவாகின்றன.

1969இல் அவுஸ்திரேலியாவில் விழுந்த முர்ஷிசன் விண்கல்லின் ஒரு பாகத்தில் இருந்த சூரியனைவிட பழமையான 40 துகள்களை இந்த ஆய்வுக்குழு ஆராய்ந்தது.

Wed, 01/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை