இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கும் சீன கப்பல்களினூடாக கொரோனா பரவ வாய்ப்பு

-மீன்பிடி அமைப்புகள் எச்சரிக்கை

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள சீன கப்பல்கள் மூலம் இலங்கையில் கொரோனா வைரஸ் இலகுவாக உள்வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன.  

அகில இலங்கை ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கம், புத்தளம் மாவட்ட மீன்பிடி உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று மாரவிலவில் செய்தியாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருந்தன.  

இதன்போதே அவர்கள் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இது தொடர்பில் வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். இதற்கிணங்க வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு மீன் பிடிப்பதற்காக வரும் கப்பல்களை இலங்கை கடலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் அந்த கப்பல்களை இலங்கை மீனவர் துறைமுகங்களுக்குள் நிறுத்துவதற்கு அனுமதிக்க கூடாதென்றும் அவர்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.  

தற்போது விமான நிலையங்களில் அதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோதும் மீன்பிடித் துறைமுகங்களில் அவ்வாறான சுகாதார பாதுகாப்பு செயற்றிட்டங்கள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். (ஸ)

பிரசாத் பூர்ணிமல்        

Mon, 01/27/2020 - 08:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை