நகர் அழகுபடுத்தும் திட்டம்; இளைஞர்களின் உணர்வுக்கு அரசு தலைவணங்கும்

நாட்டை அழகுபடுத்தும் இளைஞர்களின் தேசிய உணர்வுக்கு அரசாங்கம் தலைவணங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

'ஜனாதிபதியின் வெற்றியை கொண்டாடுவோம் மற்றும் எதிர்கால வேலைத்திட்டம்’ என்ற தொனிப்பொருளில் நேற்று முன்தினம் அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வெளிநாட்டு உதவிகளுக்காக காத்திருக்காமல் நாட்டின் நேர்மையான அணுகுமுறை மூலம் அழகுபடுத்த இளைஞர்கள் முன்வந்து செயற்படுவதை புதிய அரசு பாராட்டுகிறது. இளைஞர்களின் இந்த உத்வேகத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். இளைஞர்களுக்கு எவ்வித உத்வேகத்தையும் கொடுக்காது கடந்த அரசாங்கத்தின் இளைஞர் விவகார அமைச்சர் அவர்களை விமர்சனம் செய்துக்கொண்டிருந்தார். வரலாற்றில் ஒவ்வொரு அரசாங்கமும் அதன் பிரச்சினைகளை விற்பனை செய்துக்கொண்டே இருந்தது. பிரச்சினைகளுக்கான தீர்வுகள் காணப்படவில்லை.

அதனால்தான் நாம் 30 வருட யுத்தத்திற்கும் முகங்கொடுத்தோம். ஆனால், ரரஜபக்ஷர்கள் வரலாற்றில் அவ்வாறு இருக்கவில்லை.

பிரச்சினைகளுக்கு தீர்வு காணுபவர்களாகவும் சவால்களை வெற்றிக்கொள்பவர்களாகவுமே இருந்துள்ளோம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 01/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை