எண்ணெய் விலை உச்சம்

ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரானின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தின் ஆரம்பதில் ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 71.75 டொலர்களாக அதிகரித்தது. 2019 செப்டெம்பருக்கு பின்னர் உச்ச விலையாக இது இருந்தது.

பாதுகாப்பான சொத்தாக கருதப்படும் தங்கத்தின் விலையும் 1.91 வீதத்தால் அதிகரித்து சந்தையில் அவுன்ஸ் ஒன்று 1,603.93 டொலர்களாக அதிகரித்தது.

மறுபுறம் மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக சர்வதேச பங்குச் சந்தை விலைகளில் சரிவு ஏற்பட்டது. ஜப்பான் பங்குச் சந்தை குறியீடான நிக்கி 1.3 வீதம் வீழ்ச்சி கண்டதோடு ஹொங்கொங்கின் ஹெங் செங் 0.8 வீதம் வீழ்ச்சியை காட்டியது.

Thu, 01/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை