‘கொரோனா வைரஸ்: இலங்கை வரும் பயணிகளுக்கு பாதிப்பில்லை

கொரோனா வைரஸ் பீடிக்கப்பட்டதன் அறிகுறிகள் பற்றி இலங்கைக்கு வரும் பயணிகளைசோதனைக்குள்ளாக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த வைரஸ் காரணமாக பயணங்களை கட்டுப்படுத்தத் தேவையில்லையென்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளதால் இலங்கையில் இவ்வைரஸ் பரவல் தொடர்பான பயணக் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவேண்டிய தேவை ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சு பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இவ்வாறெனினும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட காற்றினால் பரவக்கூடிய அனைத்து ரக வைரஸ் தொடர்பாகவும் கவனமாக இருக்குமாறு சுகாதார அமைச்சும் பிரதான நோய்த்தடுப்பு டாக்டர் சுதத் சமரவீர கூறுகிறார்.

குழந்தைகள், சிறுவர்கள் கர்ப்பிணிப் தாய்மார், வயதானோர் நாட்பட்ட நோய்களினால் பீடிக்கப்பட்டிருந்ததால் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்கப்படுகின்றனர். கூடியவரை சவர்க்காரத்தை பாவித்து கைகளை நன்கு கழுவிக்கொள்ளுமாறும் கூடியவரை முகத்தை தொடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

Mon, 01/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை