வளத்தாப்பிட்டி தபாலக கட்டடத்தை புனரமைக்குமாறு ​கோரிக்ைக

சம்மாந்துறை -வளத்தாப்பிட்டி கிராமத்தில் நீண்டகாலமாக கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் தபால் அலுவலகத்தை புனரமைத்து தருமாறு இப் பகுதி வாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய வளத்தாப்பிட்டி கிராமம் ஒரு மீள் குடியேற்ற கிராமமாகும். 1990 களுக்கு பின்னரான காலப்பகுதியிலிருந்து மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். தற்போது சுமார் 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

புதிய வளத்தாப்பிட்டி, வளத்தாப்பிட்டி, பளவெளிக்கிராமம், இஸ்மாயில் புரம் எனும் நான்கு கிராமங்களை கொண்ட இந்த கிராமத்தின் பிரதான வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் இந்த தபால் அலுவலகம் தற்போது புற்புதர்கள் நிறைந்து அடர்ந்த காடாக மாறிவருகின்றன.

தபால் அலுவலக கட்டிடத்தில் மரங்கள் படர்ந்துள்ளதால் இரவு நேரங்களில் மக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். பாம்புகளின் தொல்லையும் அதிகரித்துள்ளன. தபால் அலுவலகத்தை அண்டிய பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகிவருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் இந்தக் கட்டடத்தை புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

பெரியநீலாவணை விசேட நிருபர்)

Wed, 01/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை