தொடர் வெற்றி எதிர்பார்ப்புடன் இலங்கை அணி இன்று களத்தில்

இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹராரேவில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அஞ்சலோ மத்தியூஸின் இரட்டைச் சதத்துடன் இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற நிலையில் தொடரை கைப்பற்றும் நோக்குடன் களமிறங்கவுள்ளது.

மறுபுறம் 2017 ஆம் ஆண்டுக்குப் பின் தனது சொந்த மைதானத்தில் டெஸ்ட் தொடர் ஒன்றில் ஆடும் சிம்பாப்வே அணி கடைசி டெஸ்ட்டில் வென்று தொடரை சமன் செய்யும் நோக்கில் களமிறங்கவுள்ளது.

முதல் டெஸ்டில் சிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி 358 ஓட்டங்களை பெற்றபோதும் அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் முழுமையாக சரிவை சந்தித்து தோல்வியை எதிர்கொண்டது.

மறுபுறம் மத்தியூஸ் ஆட்டமிழக்காது 200 ஓட்டங்களை பெற இலங்கை அணி முதல் இன்னிஸில் 515 ஓட்டங்களை பெற்றதோடு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார்.

தவிர குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா மற்றும் நிரோசன் திக்வல்லவும் இலங்கை அணிக்காக துடுப்பாட்டத்தில் சோபித்தனர். இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கையின் அதே பதினொருவர் இரண்டாவது டெஸ்டிலும் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

முதல் டெஸ்ட் இடம்பெற்ற அதே ஆடுகளத்தில் இந்த போட்டியும் நடைபெறுவதால் துடுப்பாட்ட வீரர்களும் சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது.

Mon, 01/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை