பெரியகல்லாறு சூரியா விளையாட்டு கழகத்தின் பாரம்பரிய விளையாட்டு விழா

பெரியகல்லாறு சூரியா விளையாட்டுக் கழகம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழர் பாரம்பரிய பண்பாட்டு கலை கலாசார விளையாட்டு விழாவை ஞாயிறன்று (19) பிற்பகல் பெரியகல்லாறு மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ரி.பிரதாஸ் தலைமையில் மாட்டுவண்டி பவனியுடன் பண்பாட்டு கலாசாரங்களை பிரதிபலித்து அதிதிகளை வரவேற்று அழைத்து வந்து, நேர்த்தியாக நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தது.

பிரதம விருந்தினராக மட்டு அரசாங்க அதிபர் எம். உதயகுமாரும் விசேட அதிதிகளாக பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினமும், தென்கிழக்கு பல்கலைக் கழக உயிரியல்துறை தலைவரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி திருமதி சுஜாறஜனி வரதராஜனும் கலந்து கொண்டனர்.

கௌரவ அதிதிகளாக பிரதேசசபை உறுப்பினர்களான எஸ்.கணேசநாதன், எஸ்.குகநாதன் ஆகியோரும் சிறப்பு அதிதியாக விளையாட்டு உத்தியோகஸ்தர் வி.அனுஷகுமாரும், அழைப்பு அதிதிகளாக ஆலய தலைவர், மற்றும் குருமாரும் அதிபர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டுக்களான வழுக்குமரம் ஏறுதல், வட்டக்கல் தூக்குதல், தலையணைச் சமர், கயிறிழுத்தல். எலியோட்டம், தேங்காய் துருவுதல் போன்ற போட்டிகள் நடைபெறுவதையும், அதிதிகளால் பரிசில்கள் வழங்கிவைக்கினர்.

கல்லாறு தினகரன் நிருபர்

Thu, 01/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை