வீதியில் ஏற்பட்ட பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து அறுவர் பலி

சீனாவில் வீதியில் திடீரென ஏற்பட்ட பள்ளத்திற்குள் பஸ் வண்டி தலை குப்புற கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். கிங்காய் மாகாணத்தின் தலைநகரான ஜைனிங் வீதியில் திடீரென பல அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டதில், அவ்வழியாக வந்த பஸ் ஒன்று அதில் கவிழ்ந்தது. பஸ்ஸில் பயணம் செய்தவர்களும், பாதசாரிகள் பலரும் பள்ளத்தில் விழுந்து மாயமானார்கள். பள்ளத்தில் விழுந்தவர்களை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 16 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளத்தில் விழுந்திருப்பவர்களை மீட்பதற்கு அங்கிருந்தவர்கள் ஒன்றுகூடியபோதும் அந்தக் குழி மேலும் பெரிதானது. இந்தப் பள்ளம் 32 அடி விட்டம் அளவு பெரிதாக இருந்தது. சீனாவில் இடம்பெறும் வேகமான கட்டுமான பணிகள் காரணமாக இவ்வாறான பள்ளங்கள் அடிக்கடி ஏற்படுவதாக குறைகூறப்படுகிறது.

Wed, 01/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை