திறமை காட்டிய மாணவர்கள் இசட். ஈ.ஓ விருது வழங்கி பாராட்டு

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 2019ம் ஆண்டில் தேசிய ரீதியில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று மத்திய மகா வித்தியாலய கேட்போர் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் (05) இடம்பெற்றது.

இங்கு இவர்கள் இசட். ஈ. ஓ. (ZEO) விருது வழங்கி பாராட்டப்பட்டனர். அக்கரைப்பற்று கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பளர் ஏ.ஜீ.பஸ்மில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வலயக் கல்விப்பணிப்பளர் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் பிரதம அதிதியாக் கலந்து கெண்டார்.

அக்கரைப்பற்று கல்வி வலயம் சார்பாக இணைப்பாடவிதானத்தில் தேசிய ரீதியில் 1ஆம்,2ஆம்,3ஆம் இடங்களைப் பெற்ற அட்டளைச்சேனை, அக்கரைப்பற்று, பொாத்துவில் கல்விக் கோட்டப் பாடசாலைகளின் மாணவர்கள் 74பேர் இதன்போது பதக்கங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் வழங்கி பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சித்திபாத்திமா, சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் உட்பட பாடசாலையின் அதிபர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)

Tue, 01/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை