அட்டாளைச்சேனை அல்-நஜா விளையாட்டு கழகத்திற்கு புதிய சீருடை அறிமுகம்

அல்நஜா விளையாட்டு கழகத்தின் 2020ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாகத் தெரிவு 22ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை கோணாவத்தை கிராம அபிவிருத்தி கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

கழகத்தின் நடப்பு வருடத்துக்கான செயலாளர் ஏ.எல்.றிம்சான் தலைமையில் இடம்பெற்ற இப் பொதுக்கூட்ட நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம். அஜ்வத், கிராம உத்தியோகத்தர் எம்.ஐ.அஸ்வர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எச்.தம்ஜித் மற்றும் கழக உயர்பீட உறுப்பினர்கள் என பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

கடந்த வருட பொதுக்கூட்டறிக்கை, கணக்கறிக்கை வாசிக்கப்பட்டு சபை ஒப்புதலுடன் அங்கீகரிக்கப்பட்டது.

நடப்பு வருடத்துக்கான தலைவர் எஸ்.எம்.இத்ரீஸ் கழகத்தின் வளர்ச்சிப்பாதை தொடர்பில் உரை நிகழ்த்தியதுடன், விளையாட்டு உத்தியோகத்தர் அஜ்வத் விளையாட்டுக் கழகங்கள் ஆற்றவேண்டிய பணிகள் தொடர்பில் வீரர்களுக்கு தெளிவூட்டினார்.

2020ஆம் வருடத்துக்கான புதிய நிருவாக சபை தெரிவின்போது தலைவராக எஸ்.எம்.இத்ரீஸ் தெரிவுசெய்யப்பட்டார். செயலாளராக ஏ.ஆர்.எம்.றிம்சான் , பொருளாளராக ஏ.எல்.றிம்சான், உதவித்தலைவராக ஏ.பீ.தஸ்தகீர், உதவிச் செயலாளராக ஜி.எம்.பஹாத், விளையாட்டு முகாமையாளராக ரீ.எம்.பயாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் கழகத்தின் கிரிக்கெட், உதைபந்தாட்ட, வலைப்பந்து, எல்லே, கபடி, மெய்வல்லுனர் அணித்தலைவர்களாக ஐ.சக்கி அஹமட், வை.நிதாஸ், எம்.பி.பர்ஷாத், ஏ.எச்.எம்.றிஸ்கான், எஸ்.ஏ.அஸ்லம், ஏ.ஜீ.எம்.அஷ்கர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன்,

கழகத்தின் நிருவாக உறுப்பினர்களாக எச்.எம்.இஸ்ஸத்தீன், ஏ.பி.அப்துல் வஹாப், ஏ.எம்.ஹசன் , எஸ்.எல்.முஸம்மில், எச்.ஹாபிழ், ஏ.றியாஸ், ஏ.அசீம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன், கணக்குப் பரிசோதகராக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.நிசார் தெரிவு செய்யப்பட்டார்.

அல்--நஜா விளையாட்டுக்கழகத்தின் ஆலோசகர்களாக ஓய்வு பெற்ற சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எம்.எம். அமீன், ஆசிரியர் எம்.ஐ.ஹாபில், ஊடகவியலாளர் றியாஸ் ஆதம். எஸ்.முபாறக் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

மேலும் 2020ம் ஆண்டுக்கான விளையாட்டுச் சீருடை மற்றும் ரீ-சேர்ட் என்பன அறிமுகம் செய்து வைகப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பாலமுனை விசேட, ஒலுவில் மத்திய விசேட நிருபர்கள்

Wed, 01/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை