பிரெக்சிட்டுக்கு பிரிட்டன் பாராளுமன்றம் ஒப்புதல்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வகைசெய்யும் பிரெக்சிட் உடன்பாட்டின் விதிகளுக்கு பிரிட்டன் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இம்மாத இறுதியில் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்த வெளியேறும். சுமார் நான்கு ஆண்டுகளாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

அரசியாரின் கையொப்பத்துக்காக பிரெக்சிட் உடன்பாடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் கையெழுத்திட்ட பின்னர் சட்டமாகும் அந்த சட்டமூலத்தை ஐரோப்பிய பாராளுமன்றம் இம்மாதம் 29ஆம் திகதிக்குள் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இதன்படி 2016 ஜுனில் இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு பெரும்பான்மையினர் வாக்களித்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் வரும் ஜனவரி 31 ஆம் திகதி பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறும். 28 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட இந்த அமைப்பில் இருந்து வெளியேறும் முதல் நாடாக பிரிட்டன் அமையவுள்ளது. என்றாலும், இவ்வாண்டு இறுதி வரை பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்களையே பின்பற்றும்.

Fri, 01/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை