தேசிய கரப்பந்தாட்ட சுப்பர் லீக் இராணுவ, விமானப்படை அணிகள் வெற்றி

மாஸ் லேசர்லைன் விளையாட்டு கழகத்துக்கு எதிராக 3--1 என்ற கணக்கில் வெற்றியை இராணுவ அணி பெற்றது. அதன்மூலம் இராணுவ அணி தேசிய கரப்பந்தாட்டப் போட்டியில் சுப்பர் லீக் ஆண்கள் பிரிவிற்கான விருதை வெற்றிகொண்டது. தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உள்ளக அரங்கில் அண்மையில் நடைபெற்ற பெண்கள் அணிக்கான போட்டியில் 3--0 என்ற கணக்கில் கடற்படை அணியை விமானப்படை அணி வெற்றிகொண்டது.

இப்போட்டித் தொடரில் சிறந்த வீரராக இராணுவ அணியின் மஹேல இத்திவர தெரிவானார். விமானப்படையைச் சேர்ந்த அனுஷா சதமாலி போட்டித் தொடரின் சிறந்த வீராங்கனைக்கான விருதைப் பெற்றார்.

இராணுவ அணி வீரர் டபிள்யூ. விக்கிரமசிங்க சிறந்த தற்காப்பு வீரருக்கான விருதையும், இராணுவ அணியின் சாமில் மலிந்த சிறந்த பந்து தடுப்பாளருக்கான விருதையும் பெற்றுக் கொண்டனர். சிறந்த பந்து தொடக்க வீரராக இராணுவ அணியின் சுமில மஸாசி தெரிவு செய்யப்பட்டதோடு சிறந்த பந்து செலுத்துனருக்கான விருதினை இராணுவ அணியைச் சேர்ந்த வசந்த லக்மால் பெற்றுக் கொண்டார்.

இரண்டாமிடத்தைப் பெற்ற மாஸ் லெசர்லைன் அணியின் தூஷார சமத் டில்ஹான் சிறந்த பந்து எறிபவராகவும், தெரிவு செய்யப்பட்டார். சிறந்த பந்து பெறுபவராக அவ்வணியினைச் சேர்ந்த லஹிரு தேஷான் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டித் தொடரின் சிறந்த வீராங்கனை விருதுடன் மேலதிகமாக சிறந்த பந்து எறிபவருக்கான விருதினையும் விமானப்படை அணி வீராங்கனை அனுஷா சதமாலி பெற்றுக்கொண்டார். விமானப்படை அணியின் தினேஷா பிரசாதினி சிறந்த பந்து தடுப்பாளராகவும், ஜே. எம். பீ. துஷாரி சிறந்த தொடக்க பந்து பரிமாறுபவருக்கான விருதுகளைப் பெற்றார்கள்.

விமானப்படை அணியின் பீ. எம். எஸ். சியாமா சிறந்த பந்து பெறுபவருக்கான விருதைப் பெற்றார். இரண்டாமிடத்தைப்பெற்ற கடற்படை அணியின் சிறந்த பந்து தற்காப்பு வீராங்கனையாக திலுஷா சஞ்சீவனி பெற்றார். கடற்படை அணியின் வை. ஜீ. எச். சஞ்சிவனி சிறந்த பந்து எறிபவராகத் தெரிவு செய்யப்பட்டார். சுப்பர் லீக் போட்டித்தொடரில் ஆண்களுக்கான பிரிவில் மூன்றாவது இடம் துறைமுக அதிகாரசபை அணிக்குக் கிடைத்ததோடு பெண்களுக்கான போட்டிப் பிரிவில் மூன்றாமிடத்தை இராணுவ அணி பெற்றுக்கொண்டது.

இதேவேளை சுப்பர் போட்டிக்கு இணைந்ததாக அமெச்சூர் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் பியகம ஓசன் லங்கா விளையாட்டு கழகம் வெற்றிபெற்றது. இறுதிப்போட்டியில் 3--1 என குருநாகல் கோல்டன் டைகர்ஸ் விளையாட்டு கழகத்தைத் தோல்வியடையச் செய்தது. பெண்கள் பிரிவில் 3--1 என மஹஉஸ்வெவ ரத்னபால விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து விளையாடிய கஹதுடுவ ஹைட்ராமணி அணியாகும்.

சிறந்த வீரராக ஓசன் லங்கா விளையாட்டுக் கழக கயான் மல்லிகாரச்சி வெற்றி பெற்றதோடு ஹைட்ராமணி அணியின் சிறந்த வீராங்கனையாக ஜீ. டீ எச். சேனரத்ன தெரிவு செய்யப்பட்டார். இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த தேசிய கரப்பந்தாட்ட போட்டித் தொடர் சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் மஞ்சி அனுசரணையுடன் நடைபெற்றது.

Wed, 01/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை