இறுவட்டுகள் மூலம் மக்கள் கவனத்தை திசைதிருப்பும் எண்ணம் எமக்கில்லை!

இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஹேரத்

'இறுவட்டுகள் மூலம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப வேண்டிய தேவை எமக்கில்லை' என்று கூறுகிறார் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஹேரத்.

கேள்வி: அரச வீடமைப்புத் துறை அமைச்சு கடந்த அரசாங்க காலத்தில் மிகவும் சர்ச்சைக்குள்ளான அமைச்சாக மாறியிருந்தது. நீங்கள் வீடமைப்பு இராஜாங்க அமைச்சராக புதிய அரசாங்கத்தின் கீழ் பதவியேற்ற பின்னர் வீடமைப்பு அபிவிருத்தித் திட்டத்துக்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் எவை?

பதில்: கடந்த அரசாங்கத்தின் கீழ் ஐந்து வருட காலத்துக்கு ஐயாயிரம் வீடுகளே நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதே போல் பிரேமதாச காலத்தில் வீடுகளை கட்டுவதற்குச் செலவிட்ட பணத்தைப் போன்று மும்மடங்கு பணத்தை பிரசாரத்துக்காக செலவிட்டுள்ளார்கள். நாம் இது தொடர்பாக பிரதேச செயலாளர்கள், கிராம சேவையாளர்கள், சமுர்த்தி அதிகாரிகள் ஆகியோரை இணைத்து இத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம்.

கடந்த அரசாங்க காலத்தில் கட்சி ஆதரவாளர்களுக்கே வீடுகளை வழங்கினார்கள். சில வேளைகளில் அவர்கள் அதனை விற்று விடுகிறார்கள். உதாரணமாக கொழும்பிலுள்ள ஒருவருக்கு ஹங்வெல்லையில் வீடொன்றை வழங்குகின்றார்கள். அவர்கள் அதனையும் பெறுகின்றார்கள். அதனால் நாம் ஒரு திட்டமிட்ட முறையிலேயே வீடுகளைப் பெற்றுக் கொடுப்போம். நாம் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே வீடுகளை அமைப்போம். தற்போதைய அரசங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டின் அபிவிருத்தி, மக்கள் நலன் என்பவற்றிற்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

வரி குறைப்பு காரணமாக மக்களுக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளன. எமது அரசின் அரசியல் பாதை வலுவானது. கடந்த அரசாங்க காலத்தில் இந்த அமைச்சின் முன்னேற்றம் குறித்து நாம் திருப்தியடையவில்லை. நாம் அனைத்து வசதிகளையும் கொண்ட வீடுகளை அமைக்க திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். கடந்த அரசாங்கம் வீடுகளைப் போன்று வேலைவாய்ப்புகளையும் தரமற்றவர்களுக்கே வழங்கியது. நாம் அரசியல் கட்சி பேதமின்றி வீடுகளற்றோருக்கு வீடுகளைப் பெற்றுக் கொடுப்போம்.

கேள்வி: நீங்கள் கூறிய பாரிய வீட்டுத் திட்டங்களை ஆரம்பிக்க குறிப்பிட்ட அரச நிறுவனங்களுக்கு இன்னும் தலைவர்கள், பணிப்பாளர் குழுவினர் நியமிக்கப்படவில்லையல்லவா? அதன்படி பொதுத் தேர்தலுக்கு முன்னர் அதனை திட்டமிட முடியும் என எண்ணுகின்றீர்களா?

பதில்: தகுதியற்றவர்களை நியமித்தால் அந்நிறுவனங்களில் ஊழல் மோசடிகளே இடம்பெறும். அதே போல் நிறுவனமும் பாதிப்படையும். எனது அமைச்சின் கீழ் பதின்மூன்று நிறுவனங்கள் உள்ளன. அவற்றிற்கு மிகவும் பலவீனமான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அந்நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளன. எவரும் தமது ஆதரவாளர்களுக்கு அமைச்சுகளில் பொறுப்பான பதவிகள் வழங்க முடியாது. நிச்சயமாக விடயங்கள் தொடர்பில் அறிவிருக்க வேண்டும். பொறியியல் கூட்டுத்தாபன குழுவுக்கு கடந்த அரசாங்கத்தில் டொக்டர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இன்று நாம் பொறியியலாளர்களையே நியமித்துள்ளோம்.

கேள்வி: இறுவட்டு பிரச்சினையைக் கொண்டு வந்து மக்களுக்குவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்ற முயற்சி செய்வதாக எதிர்க் கட்சியினர் குற்றஞ் சாட்டுகின்றார்களே...

பதில்: நம் மக்களை ஏமாற்ற வேண்டிய அவசியமில்லை. நாம் இன்னும் சில மாதங்களில் மக்களிடம் செல்ல வேண்டும். தற்போதைய அரசு என்ன செய்கின்றது என்பது மக்களுக்குத் தெரியும். நல்லாட்சி என்ற போர்வையில் கடந்த அரசாங்கம் மக்களை எவ்வாறு ஏமாற்றியது என்பதை மக்கள் அறிவார்கள். ரஞ்சன் ராமநாயக்க போன்றோர் நாட்டின் சட்டத்தை வழிநடத்திய விதத்தை நாம் கண்டோம். எமது அரசாங்கம் வரிக் கொள்கையொன்றை அறிமுகம் செய்துள்ளது. மக்களின் பிரச்சினைகளை அறிந்து விரைவில் நடவடிக்கைகளை எடுப்போம்.

கேள்வி: தற்போது நாட்டின் சட்டம் புதர் மண்டியுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ் சாட்டுகின்றார்களே.

பதில்: கடந்த அரசாங்கத்தைப் போன்று நீதிமன்ற சுயாதீனம் பற்றி பேசிக் கொண்டு, சட்டத்தை துஷ்பிரயோகம் செய்த அரசாங்கத்தை நாம் ஒருபோதும் காணவில்லை. ரஞ்சன் அனைத்தையும் தந்திரமான முறையில் செய்துள்ளார். எமது அரசாங்கத்தின் சில அமைச்சர்களை கொலை செய்யவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இன்று அனைத்தும் வெளிவந்துள்ளன. கல்வியறிவுடையவர்கள் தூரநோக்கின்றி ஒரு வார்த்தையும் கூற மாட்டார்கள். ரஞ்சனின் கல்வியறிவு பற்றி நாம் அறிவோம். அறியாமையின் விளைவுதான் இது. அவருக்கு நடிக்கக் கிடைத்த பாத்திரங்கள் கூட ஒன்று பெண் பாத்திரம், அல்லது முட்டாள் மனிதர்களின் நகைச்சுவைப் பாத்திரம். நல்ல கம்பீரமான கதாபாத்திரத்தில் அவரை நாம் பார்த்ததில்லை. பாராளுமன்ற ஜோக்கரையே தற்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: 19வது அரசியலமைப்புத் திருத்தத்தை மீண்டும் திருத்துவது என்பது ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைப்பதற்கு சமம் என்று எதிர்க் கட்சி குற்றம் சாட்டுகின்றதே...

பதில்: இவர்கள் 19வது அரசியல​ைமப்பு திருத்தத்தை கொண்டு வந்தது ஒரு குடும்பத்துக்கு எதிராகத்தான். பொலிஸ் மாஅதிபரை மாற்றுவதறகு குண்டு வெடிக்கும் வரை காத்திருந்தார்கள்.

சுபத்ரா தேசப்பிரிய

Fri, 01/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை