மேல் மாகாண திறந்த, ஜூனியர் தரவரிசை மேசைப்பந்து சம்பியன்ஷிப் போட்டி

மேல் மாகாண திறந்த மற்றும் ஜூனியர் தரவரிசை மேசைப் பந்து சம்பியன்ஷிப் - 2019 போட்டிகள் கடந்த 04ம் திகதி கல்கிஸ்ஸை சென் தோமஸ் கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. பிங் பொங் அகடமியினால் நடாத்தப்பட்ட இந்த போட்டிகளின் நிகழ்வுக்கு இலங்கை மேசைப்பந்தாட்டச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன ஸ்ரீநாத் விஜேதுங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

போட்டி முடிவுகள்

08 வயதின் கீழ் ஆண்கள் ஒற்றையர் - கொழும்பு றோயல் கல்லூரியின் ஆதில் நபீல், கொழும்பு ஆனந்தா கல்லூரியின் யெனுல் பிம்சர அபேவிக்ரமவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 05/11, 11/05, 11/06

08 வயதின் கீழ் பெண்கள் ஒற்றையர் - கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் ரணுகி சேனாரத்ன, கம்பஹா ஹொலி குரோஸ் கல்லூரியின் செனெலா பெரேராவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 11/08, 11/08

10 வயதின் கீழ் ஆண்கள் ஒற்றையர் - கொழும்பு றோயல் கல்லூரியின் சந்தித் சேனாரத்ன, ஆகில் திலகசேகரவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 12/10, 09/11, 11/08

10 வயதின் கீழ் பெண்கள் ஒற்றையர் -

கொழும்பு மியுசியஸ் கல்லூரியின் மேகல்யா பெர்னாண்டோ, கொழும்பு மியுசியஸ் கல்லூரியின் நெத்துலி நிம்நராவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 11/05, 11/03

12 வயதின் கீழ் ஆண்கள் ஒற்றையர் -

கொழும்பு றோயல் கல்லூரியின் திரான் ஹார்மர், கொழும்பு றோயல் கல்லூரியின் ஜனித் பட்டுகெதரவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 12/10, 11/05

12 வயதின் கீழ் பெண்கள் ஒற்றையர் -

கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் திசாலி ரணசிங்க, கம்பஹா ஹொலி குரோஸ் கல்லூரியின் சமல்சா தேவ்மியைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 11/07, 12/10

15 வயதின் கீழ் ஆண்கள் ஒற்றையர் -

கம்பஹா லைசியம் சர்வதேச பாடசாலையின் சனுத் ஜயசுமன, கம்பஹா லைசியம் சர்வதேச பாடசாலையின் மஹித் ஜயசுமனவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 12/10, 11/09

15 வயதின் கீழ் பெண்கள் ஒற்றையர் -

கொழும்பு மியுசியஸ் கல்லூரியின் சந்தின்தி ஜயசிங்க, கொழும்பு மியுசியஸ் கல்லூரியின் ஒனெலி லெஹென்சாவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 11/13, 15/13, 11/08

18 வயதின் கீழ் ஆண்கள் ஒற்றையர் -

கொழும்பு றோயல் கல்லூரியின் திசாஸ் ரன்சகொட, கொழும்பு றோயல் கல்லூரியின் வினுக குணவர்தனவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 11/04, 11/09

18 வயதின் கீழ் பெண்கள் ஒற்றையர் -

கொழும்பு மியுசியஸ் கல்லூரியின் ஒனெலி லெஹென்சா, கொழும்பு மகளிர் கல்லூரியின் மின்னா ஹசிமைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 11/07, 11/08

திறந்த ஆண்கள் ஒற்றையர்

- கம்பஹா லைசியம் சர்வதேச பாடசாலையின் மஹித் ஜயசுமன, கொழும்பு றோயல் கல்லூரியின் திசாஸ் ரன்சகொடவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 18 / 16, 06/11, 12/10

திறந்த பெண்கள் ஒற்றையர் -

கொழும்பு மியுசியஸ் கல்லூரியின் சந்தின்தி ஜயசிங்க, கொழும்பு மியுசியஸ் கல்லூரியின் ஒனெலி லெஹென்சாவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 09/11, 11/05, 11/09

(புத்தளம் விசேட நிருபர்)

Thu, 01/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை