சாஹிரா கல்லூரி இல்ல விளையாட்டுப் போட்டி

கொழும்பு சாஹிரா கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கல்லூரி மைதானத்தில் அதிபர் ரிஸ்வி மரிக்கார் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் நீச்சல் வீரர் ஜூலியன் போலிங் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்தப் போட்டியின் சாம்பியனாக அங்கோரா இல்லம் தெரிவானது. கோர்டோவா இல்லம் இரண்டாம் இடத்தையும், பாக்தாத் இல்லம் மூன்றாம் இடத்தையும், இஸ்தான்புல் இல்லம் நான்காவது இடத்தையும் பெற்றன.

அங்கோரா இல்லத்தின் தலைவன் எம்.என்.எம். ரினாஸ் பிரதம அதிதி ஜூலியன் போலிங் இடம் இருந்து வெற்றி கிண்ணத்தை பெற்றுக்கொண்டார்.

ருசெயிக் பாரூக்

Mon, 01/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை