முஷாரபிற்கு எதிரான மரண தண்டனை ரத்து

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்புக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை லாகூர் உயர் நீதிமன்றம் ‘அரசியல் சட்டத்துக்கு விரோதமானது’ என்று கூறி ரத்து செய்துள்ளது. தேசத்துரோக வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்ட முஷாரப்புக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என தெரிவித்த லாகூர் உயர் நீதிமன்றம் முஷாரபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்து செய்தது.

முஷாரப் தற்பொழுது துபாயில் தலைமறைவாக வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மரண தண்டனைத் தீர்ப்பை சட்ட விரோதம் என்று லாகூர் உயர் நீதிமன்றம் அறிவித்ததோடு, "புகார் பதிவு செய்தமை, நீதிமன்ற உருவாக்கம், அரசு வழக்கறிஞர்கள் தேர்வு அனைத்தும் சட்ட விரோதமானதால் அந்தத் தீர்ப்பு செல்லுபடியாகாது’ என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

எனவே முஷாரப் மீது புதிய வழக்கையே தொடுக்க முடியும். அதுவும் அமைச்சரவை அனுமதி பெற்ற பிறகுதான் இவருக்கு எதிராக வழக்கு தொடர முடியும்.

முஷாரப்புக்கு எதிரான தேசத் துரோக வழக்கு 2013ஆம் ஆண்டு விசாரிக்கப்பட்டது. 2007-ல் அரசியல் சாசனத்தை இரத்து செய்து அவசர கால சட்டத்தை பிறப்பித்தது தொடர்பான இந்த வழக்கு பல இடையூறுகளுடன் நடந்து வந்ததுடன் கடைசியில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

 

Tue, 01/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை