நிறுவனங்களின் தலைவர்களை இராஜினாமா செய்யுமாறு ஆளுநர் கோரிக்ைக

கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் நான்கு நிறுவனங்களின் தலைவர்களையும் உடனடியாக தமது பதவிகளை இராஜினாமாச் செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் எழுத்து மூலம் கோரியுள்ளார்.

மாகாணத்தின் முன்பள்ளிப் பணியகம், மாகாண சுற்றுலாத்துறை பணியகம், மாகாண வீடமைப்பு அதிகார சபை, மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை ஆகியவற்றின் தலைவர்களைப் பதவி விலகுமாறு கோரி ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார். இவ்வார முற்பகுதிக்குள் இராஜினாமாக் கடிதங்களை தாமதமின்றி சமர்பிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிறுவனங்களின் தலைவர்கள் பதவி விலகிக் கொண்டதன் பின்னர் அந்த வெற்றியீடங்களுக்குப் புதியவர்கள் நியமிக்கப்பட்டுப் புதிய பணிப்பாளர் சபைகளை ஆளுநர் நியமிக்கவுள்ளதாக ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன தெரிவித்தார். தற்போது பதவியில் உள்ள தலைவர்களும், பணிப்பாளர் சபைகளும் முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ, ரோஹித போகொல்லாகம ஆகியோரால் நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எம்.ஏ.எம். நிலாம்

Wed, 01/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை