அனைத்து அமெரிக்க படைகளும் தீவிரவாதிகளாக ஈரான் பிரகடனம்

அனைத்து அமெரிக்க படைகளும் தீவிரவாதிகளாக ஈரான் பாராளுமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரானிய புரட்சிக் காவல் படையின் வெளிநாட்டுப் பிரிவுக்கான தளபதி கசாம் சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பிலேயே இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதன்படி அமெரிக்கப் படைகள், பெண்டகன் ஊழியர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகள், நிறுவனங்கள், தளபதிகள் மற்றும் சுலைமானியின் வீர மரணத்திற்கு உத்தரவிட்டவர்கள் தீவிரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“இந்தப் படைகளுக்கு இராணுவ, உளவு, நிதி, தொழில்நுட்ப, சேவைகள் மற்றும் ஏற்பாடுகள் உட்பட எந்த ஒரு உதவியையும் வழங்குபவர்கள் தீவிரவாதத்திற்கு உதவுபவர்களாக கருதப்படுவார்கள்” என்று ஈரான் பாராளுமன்றம் குறிப்பிட்டது.

இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து எம்.பிக்கள் அனைவரும் “அமெரிக்கா ஒழிக” என்று கோசம் எழுப்பினர்.

சுலைமானி தலைமை வகித்த ஈரானிய புரட்சிக் காவல் படையின் வெளிநாட்டு நடவடிக்கை பிரிவுக்கு 170 மில்லியன் பௌண்ட்கள் நிதி ஒதுக்குவதற்கும் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

Wed, 01/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை