இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட்: சிம்பாப்வே அணி நிதான ஆட்டம்

இலங்கை - -சிம்பாப்வே அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் சிம்பாப்வே அணி தேனீர் இடைவேளையின் போது 6 விக்கெட் இழப்புக்கு 297 ஓட்டங்களை பெற்றது.

சிம்பாப்வேயின் ஹராரேயில் நேற்றுமுன்தினம் ஆரம்பமானது. முதல் நாள் ஆட்ட நேரமுடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்களை பெற்றது.அவ்வணி நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய போது அவ்வணியின் ஏர்வின் 85 ஓட்டங்களுக்கும் அணியின் தலைவர் வில்லியம்ஸ் 18 ஓட்டங்களுக்கும் விக்கெட் காப்பாளர் சக்பாவா 8 ஓட்டங்களுக்கும் டைலர் 21 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணியின் சார்பாக லக்மால் இரண்டு விக்கெட்டையும் எம்புல் தெனிய மூன்று விக்கெட்டையும் குமார ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

இரு அணிகளும் இரண்டு டெஸ்ட் போட்டியில் மோதவுள்ளன.

இச் செய்தி அச்சுக்கு போகும் வரையான தகவலே இவை .

Tue, 01/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை