பொதுத் தேர்தலின் பின்னரே இறுதித் தீர்மானம்

அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான இறுதித் தீர்மானங்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னரே எடுக்கப்படும் என்று பாராளுமன்றத்தின் பிரதான அரசாங்க கொறடாவும், வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுக கப்பற்துறை அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

பாராளுமன்றில் கடந்த மூன்றாம் திகதி ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னரே எமது அரசாங்கம் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானங்களை எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. எமது நாட்டுக்கு ஸ்திரமான ஒரு அரசாங்கமும் சீரான ஒரு அரசியலமைப்பும் தேவைப்படுகின்றன.

ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசியலமைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். அஷ்ரப்பை விட அதிக ஆசனங்களை பெறும் நோக்கத்தில் இந்த சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது பாராளுமன்றத்தில் எமக்கு பெரும்பான்மை இல்லை. இவ்வாறெனினும் நாம் அபிவிருத்தி செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறான நிலை ஏற்பட ஐக்கிய தேசிய கட்சியும் ஆட்சியில் இருந்தவர்கள் மற்றும் ஜே.வி.பி.யுமே காரணம்.

சர்வதேச சமூகத்தின் விருப்பத்துக்கு ஏற்ப அவர்கள் அரசியலமைப்பை மாற்றினார்கள். இது நாட்டில் அபிவிருத்தியை குறைத்துவிட்டது. ஆனால் இந்த அரசாங்கத்துக்கு அபிவிருத்தியை தொடர முடியாமல் உள்ளது. அபிவிருத்திக்கு 19 ஆம் திருத்த சட்டத்தால் தாமதம் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் 3 ஆம் திகதி இது முடிவுக்கு வந்துவிடும். அதற்காகத்தான் நாம் காத்திருக்கின்றோம் என்று அமைச்சர் அங்கு குறிப்பிட்டார்.

Mon, 01/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை