ஈரான் வான்வெளியை விமானங்கள் தவிர்ப்பு

ஈரானிய வான்வெளியைத் தவிர்ப்பதாக சில நாட்டு விமானச் சேவைகள் தெரிவித்துள்ளன.

ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எமிரேட் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசிய ஏர்லைன்ஸ், தாய்வானின் சீன ஏர்லைன்ஸ், கொரியன் ஏர்லைன்ஸ், தாய் ஏர்வேஸ் உட்பட பல விமான சேவைகளும் ஈரானிய வான்வெளியைத் தவிர்ப்பதாகக் கூறின.

தாக்குதல் நடப்பதற்கு முன்னரே அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள் ஈரான், ஈராக் பகுதியில் செயல்படுவதை நிறுத்தியதாக அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

அதன்படி அமெரிக்க விமான நிறுவனம் வளைகுடா நாடுகளில் உள்ள தனது விமான சேவைகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளது. வளைகுடா நாடுகளுக்கு பயணிகள் விமானம், சரக்கு விமானம் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் உடனே நிறுத்தும்படி அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதுபோன்று ஈரானில் இருந்து வரும் விமானங்களுக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. 

Thu, 01/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை