மெக்சிகோவில் பழங்குடியினர் பத்துப் பேர் சுட்டுக் கொலை

மேற்கு மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் ஒன்றினால் நடத்தப்பட்டதாக சதேகிக்கப்படும் தாக்குதல் ஒன்றில் பத்து பழங்குடி இசைக்கலைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு தீயிடப்பட்டுள்ளனர்.

நஹுவாஸ் பழங்குடி குழுவின் உறுப்பினர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு திரும்பும் வழியில் குவர்ரேரோ மாநிலத்தின் சிலாபா நகரில் வைத்து இந்த தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர். இதில் 15 தொடக்கம் 42 வயது கொண்ட ஆண்களே கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த பிராந்தியத்தில் உள்ள பழங்குடியினர் மீது லொஸ் ஆர்டிலோஸ் என்ற குற்றக் கும்பல் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

மெக்சிகோவின் வறிய மாநிலங்களில் ஒன்றான குவர்ரேரோ அந்நாட்டின் அதிக வன்முறை கொண்ட மாநிலமாகவும் உள்ளது.

Mon, 01/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை