திருவெம்பாவையும் திருவாசக முற்றோதலும் ஆரம்பம்

இந்துக்கள் குறிப்பாக இந்து மகளிர் சிவனை நினைந்து அனுஸ்ட்டிக்கும் திருவெம்பாவை விரதம் நேற்று (01) புதன்கிழமை ஆரம்பமாகியது.

அம்பாறை மாவட்டத்தில் பரவலாக 10 தினங்களுக்குப்பிறகு மழை பொழிந்தது. இருந்தும் இந்துக்கள் 4 மணிக்கு முன்பதாகவே எழுந்து திருப்பள்ளியெழுச்சி ஊர்வலத்திலும் ஆலய திருவெம்பாவை பூஜைகளிலும் கலந்துகொண்டனர்.

இவ்விரதம் தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற்று 10ஆம் நாள் தீர்த்தோற்சவம் இடம்பெறும். அந்தவகையில் காரைதீவு இந்து சமய விருத்திச்சங்கம் வருடாந்தம் நடாத்திவரும் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி ஊர்வலம் நேற்று 1ஆம் திகதி அதிகாலை நடைபெற்றது. முதல்நாள் ஊர்வலம் நிறைவுற்றதும் திருவெம்பாவை விசேடபூஜை காரைதீவு கண்ணகை அம்மனாலயத்தில் நடைபெற்றது.

ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் பூஜையினை நடாத்தி ஆசியினை வழங்கினார். பின்னர் திருவாசகமுற்றோதல் நடைபெற்றது. அதிகாலை வேளைகளில் மக்கள் புத்தாண்டு வாழ்த்துக்களைக்கூறி கைலாகு கொடுத்ததையும் அவதானிக்க முடிந்தது.

காரைதீவு குறூப் நிருபர்

Thu, 01/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை